Skip to main content

ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டி20; இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி சாதிக்குமா?

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

nn

 

உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட உள்ளது.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதன் விளைவால் மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், உலக கோப்பை டி 20 தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி அதிக அளவில் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாலும், அடுத்த டி20 உலக் கோப்பைக்கு தயாராகும் வகையிலும்  சூர்யகுமார் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகக் கோப்பை முடிந்து ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஸ்மித், ஹெட், ஸ்டாய்னிஸ், இங்லிஷ் ஆகிய வீரர்களுடன் இளம் வீரர்கள் கொண்ட டி20 அணி இந்தத் தொடரில் களமிறங்க உள்ளது. இரு அணிகளுக்குமிடையே ஐந்து டி20 போட்டிகள் நடக்க உள்ளது. இதன் முதல் டி20 போட்டியானது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் இன்று விசாகப்பட்டினத்திற்கு வருகை புரிந்தனர். நாளை இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.