Skip to main content

நடந்த தவறுக்கு நானே முழு பொறுப்பு! - கண்ணீர் மல்க பேட்டியளித்த ஸ்மித்

Published on 29/03/2018 | Edited on 30/03/2018

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நானே முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டியளித்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் ஸ்டீவன் ஸ்மித். மேலும், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

இந்நிலையில், இன்று சிட்னி சென்றடைந்த ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது கண்ணீர் மல்க பேட்டியளித்த ஸ்மித், ‘என்னை மன்னித்துவிடுங்கள். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த நான், நடந்த எல்லாத் தவறுகளுக்கும் முழுப் பொறுப்பேற்கிறேன். எனது இந்த மோசமான பிழை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தவறுகளை சரிக்கட்டுவதற்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். நான் எனது நாட்டுக்காக விளையாடியதை எண்ணி பெருமைகொள்கிறேன். என் வாழ்க்கையே கிரிக்கெட்டாகத்தான் இருந்தது; இனிமேலும் இருக்கும். நானே ஆஸ்திரேலியாவின் கேப்டன். என் கண்பார்வையில் நடந்த அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.