Skip to main content

குல்தீப் யாதவ்விடம் உஷார்! - டீமுக்கு மோர்கன் சொல்லும் அட்வைஸ்

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

தொடரில் வெல்லும் கனவு நீடிக்கவேண்டும் என்றால் குல்தீப் யாதவ்விடம் உஷாராக இருக்கவேண்டும் என சகவீரர்களுக்கு கேப்டன் மோர்கன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
 

morgon

 

 

 

இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20க்களைக் கொண்ட தொடர், ஜூலை 3ஆம் தேதி ஓல்டு ட்ரஃபோர்டில் தொடங்கியது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெறும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், அன்றைய போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 
 

வழக்கமான ஸ்பின்னர்களில் இருந்து இடதுகை ரிஸ்ட் ஸ்டைலில் பந்துவீசும் குல்தீப் யாதவ்வை, இங்கிலாந்து வீரர்களால் கணிக்க முடியவில்லை. அதேபோல், அன்றைய போட்டியில் அதிகளவு ஸ்பின்னாக நிலையிலும், சரியான வேகமாற்றங்களை ஏற்படுத்தியதே விக்கெட் வீழ்ந்ததற்குக் காரணம் என குல்தீப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு, பெருத்த நெருக்கடியாக மாறியிருக்கிறார் குல்தீப்.
 

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ‘எங்கள் திட்டங்களை குல்தீப் பாழாக்கிவிட்டார். சிறப்பாக பந்துவீசும் அவரிடத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கக் கூடாது. எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தெரியும்; அதை செய்யவும் வேண்டும். இன்றைய மட்டும் அடுத்த போட்டியில் வகுத்த திட்டங்களை முறையாக செயல்படுத்தவேண்டும். களத்தில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினாலே, பவுலரின் மனநிலையைப் படித்து அதன்படி செயல்பட முடியும்’ என தெரிவித்துள்ளார்.