13-ஆவது ஐ.பி.எல் தொடரின் 37-ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில், ஜடேஜா அதிகபட்சமாக 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 70 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லருக்கு 'ஆட்டநாயகன்' விருது வழங்கப்பட்டது.
போட்டிக்குப் பின் சென்னை அணியின் கேப்டன் தோனி, ஜோஸ் பட்லரின் விருப்பத்திற்கு இணங்கி தான் அணிந்திருந்த ஜெர்சியை ஜோஸ் பட்லருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். தோனியின் ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராஜஸ்தான் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய போட்டி, ஐ.பி.எல் தொடரில் தோனிக்கு 200 -ஆவது போட்டி என்பதும், ஜோஸ் பட்லர் தோனியின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Holding No. 7, while on cloud 9. ?#CSKvRR | #HallaBol | #IPL2020 pic.twitter.com/QLmKAzE1zc
— Rajasthan Royals (@rajasthanroyals) October 19, 2020