Skip to main content

பயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால் தோனி கொடுக்கும் வினோத தண்டனை!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் உளவியல் பயிற்சியாளர் பேடி அப்டன் "தி பேர்ஃபூட் கோச்" என்ற தலைப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார்.அந்த புத்தகத்தில் இருக்கும் சில சுவாரஸ்ய தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார் .அதில் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே  இருந்த காலத்தில் நான் பயிற்சியாளராக சேர்ந்தேன். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளேவும் , ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்தர் சிங் இந்திய கிரிக்கெட் அணியில்   இருந்தனர் .  நான் அணியிடம் சேர்ந்த போது வீரர்கள் மற்றும் கேப்டன்களிடம் கேட்டுக் கொண்டது. அனைவரும் பயிற்சிக்கு உரிய நேரத்தில் வர வேண்டும் என ஆலோசனை தெரிவித்தேன்.

 

 

ms

 

நம்மை நாமே நிர்வகிக்க கற்க வேண்டும் என் தெரிவித்தேன். அதற்கு அனைத்து வீரர்களும் ஆமாம் என தெரிவித்தனர், அதன் பிறகு பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களை என்ன செய்யலாம் என்று வீரர்களிடம் கேட்டேன். அதற்கு வீரர்கள் கேப்டன்களே அதற்கான முடிவை எடுக்கட்டும் என தெரிவித்தனர். அதன் பிறகு டெஸ்ட் அணியின் கிரிக்கெட் கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே தனது வீரர்களுக்கு பயிற்சியின் போது தாமதமாக வந்தால் அவர்களின் ஊதியத்தில் ரூபாய் 10000 அபராதம் விதிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். ஆனால் டோனி வித்தியாசமாக ஆலோசனையை எனக்கு வழங்கினார் என்று தெரிவித்த அப்டன் டெஸ்ட் அணியின் இடம் பெற்ற வீரர்கள் பயிற்சிக்கு தாமதமாக வந்தால் அந்த வீரர் ரூபாய் 10000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் , ஒரு நாள் கிரிக்கெட் அணியின் இடம் பெற்ற வீரர்கள் பயிற்சிக்கு தாமதமாக வந்தால் ஒவ்வொரு வீரரும் ரூபாய் 10000 அபராதம் செலுத்த வேண்டும் என்ற முடிவை என்னிடம் தெரிவித்தார் என பேடி அப்டன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

 

 

virat

 

இந்த ஆலோசனைக்கு பிறகு எந்த ஒரு வீரரும் பயிற்சிக்கு தாமதமாக வந்ததே இல்லை என தெரிவித்த அப்டன் , தோனியின் உண்மையான பலமே அவரின் அடக்கம், அமைதி சூழ்நிலைக்கு ஏற்றார் போல் விளையாடுவது தான் என தெரிவித்தார். இந்திய அணியின் வலிமையான கேப்டன் , சிறந்த கேப்டன் தோனி என்றால் மறுப்பதற்கில்லை. அணிக்கு மிகவும் கடினமான நேரத்தில் தோனி எடுக்கும் முடிவுகள் ஆச்சரியத்தை அளிக்கும்.அது போன்ற நேரத்தில் மற்ற வீரர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாக செயல்படுவார் டோனி என முன்னாள் பயிற்சியாளர் பேடி அப்டன் தெரிவித்தார்.