Skip to main content

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு ‘குட்-பை’ சொன்ன பிசிசிஐ!

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு ‘குட்-பை’ சொன்ன பிசிசிஐ!

டெல்லியில் காற்று மாசுபாடு குற்றச்சாட்டுகள் எழுந்தால் இனி அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என என பிசிசிஐ அறிவித்துள்ளது.



இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இலங்கை அணியின் வீரர்கள் காற்று மாசினைக் காரணம் காட்டி முகமூடி அணிந்து கொண்டு விளையாடினர். மேலும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு கமகே அசாதாரணமாக உணர்வதாக நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டம் 17 நிமிடங்கள் தடைப்பட்டது. அவர் களத்தில் இருந்து வெளியேற, பின்னர் வந்த சுரங்கா லக்மலும் அதே காரணத்தால் விளையாட முடியாமல் திணறினார். மேலும் 4 நிமிடங்களுக்கு ஆட்டம் தடைப்பட்டது.

இதற்கிடையில் சீரான வேகத்தில் ரன்குவித்த கேப்டன் கோலி, அதிக இடைவெளிகளின் காரணமாக சொதப்பலாக ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். காற்று மாசு குற்றச்சாட்டு எழுந்தபோது நடுவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை நடத்தினர். அதேசமயம், இலங்கை அணிக்கு 10 வீரர்களோடு விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அதற்கு இடம் கொடுக்காத கேப்டன் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்திய அணியின் ரன்குவிப்பைக் குலைப்பதற்காகவே இலங்கை வீரர்கள் காற்று மாசினை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டனர் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், இலங்கை வீரர்கள் பிசிசிஐ-க்கு அளித்த புகாரைப் பரிசீலனை செய்த பிசிசிஐ, இனி டெல்லியில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் கருத்தில் கொள்வது மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து, அதிகபட்ச காற்று மாசுபாடு குற்றச்சாட்டுகள் எழுவதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்