கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பிரேசிலின் மரகானா மைதானத்தில் நடந்த கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தியது அர்ஜெண்டினா அணி. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி வீரர் டி மரியா கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். 1993- ஆம் ஆண்டுக்கு பிறகு அர்ஜெண்டினா அணி கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது.
தெற்கு அமெரிக்கா நாடுகள் மட்டும் பங்கேற்கும் கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜெண்டினா கோப்பை வென்றது. கோபா அமெரிக்கா கோப்பையை 15 ஆவது முறையாக வென்று அர்ஜெண்டினா அணி சாதனை படைத்துள்ளது. 17 ஆண்டுகளாக அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி முதல் முறையாக சர்வதேச கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.