Skip to main content

“பிட்ச் இவ்வளவு மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை, இதில் பேட்டிங்கே செய்வது கடினம்”- தோனி

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

சென்னை சேப்பாக்கத்தில் 12வது ஐபிஎல் போட்டி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவும் ஆர்சிபி அணிகளும் மோதியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 71 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சிஎஸ்கே விளையாடியது. நிதானமாக ஆடியதால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிப் பெற்றது. டி20 போட்டி என்றால் 70 ரன்கள் என்பது முதல் ஐந்து ஓவரிலேயே கடந்துவிடுவார்கள். ஆனால், நேற்றோ இரண்டு அணிகளுமே அந்த ரன்களை கடக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு காரணம் பிட்ச்தான். சுழற்பந்திற்கு ஏற்றார்போல ஸ்லோ ட்ராக்காக பிட்ச் அமைக்கப்பட்டிருக்கிறது. 
 

ms dhoni

 

 

போட்டி முடிவடைந்த் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தோனி, “இந்த மாதிரியான பிட்சை நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்படி இருக்கும் பிட்சில் எப்படி பேட் செய்ய முடியும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமில்லாமல், மெதுவாக பந்துகள் வருகின்றன. இதை பார்த்தால் கடந்த 2011 சாம்பியன் லீக் போட்டி பிட்ச்தான் நினைவுக்கு வருகிறது. ஒருவருடம் கழித்து நாங்கள் வந்திருப்பதால் பிட்ச் நன்றாக அமைக்கப்பட்டு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், இவ்வளவு கடினமானதாக இருக்கும் என நினைக்கவில்லை.இதுபோன்ற ஆடுகளம் இருந்தால், எங்களுக்கும் பேட் செய்ய கடினமாகத்தான் இருக்கும். இப்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இன்னும் சிறப்பாக பராமரிக்க வேண்டியது அவசியம். பேட்ஸ்மேன்கள் அதிகமான ஸ்கோர் அடிக்கும் விதத்தில் இருக்க வேண்டும், எதிரணிகளும் இந்த ஆடுகளத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
 

இந்த மைதானத்தில் நாங்கள் 150 ரன்கள் வரை குறந்தபட்சம் எதிர்பாத்தோம். ஆனால், 90 - 120 ரன்கள் சேர்ப்பது என்பது மிகவும் குறைவானது. தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியிருந்தால் இந்த  ரன்கள் அடிப்பதுக் கூட கடினமாக இருந்திருக்கக் கூடும்.ஆடுகளம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.இந்த பிட்சில்தான் நாங்கள் பிராக்டிஸ் மேட்ச்கள் ஆடினோம். அப்போது இவ்வாறு சுழற்பந்துகள் சுழலவில்லை. ஐபிஎல் என்பது வழக்கத்தைவிட அதிகமாக ஸ்கோர் செய்ய வேண்டிய போட்டி. பயிற்சி ஆட்டத்தைவிட 30 ரன்கள் வரை அதிகமாக அடிப்போம் என்று எதிர்பாத்தோம், இப்போது அதைக் கூட அடிக்க முடியவில்லை.
 

இரவு நேரத்தில் பனி இருக்கும் பந்துவீச கடினமாக இருக்கும் என்று நினைத்ததால் டாஸ் வென்றவுடன் பவுலிங்கை தேர்வு செய்தோம். ஆனால், பிட்ச் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒருவேளை நாங்கள் முதலில் பேட் செய்திருந்தால், நிலைமை மாறியிருக்கும். ஒருவேளை ஆடுகளம் இன்னும் தரமாக அமைந்திருந்தால், போட்டி வேறுமாதிரி போயிருக்கும். தொடர்ந்து அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுவதற்கு சேப்பாக்கத்தில் இப்போது அமைக்கப்பட்டு இருக்கும் பிட்ச் சரியானது அல்ல” என்று தோனி சேப்பாக்க்கம் பிட்ச் குறித்து வறுத்தெடுத்தார்.