தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை தூத்துக்குடி அணி எடுத்தது. 144 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய தலைவன் சற்குணம் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆட்டத்தின் இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.