மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூலம் 4,000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை வேகமாக எட்டிய ஆல்ரவுண்டரானார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து- மே.இ.தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் மே.இ.தீவுகள் வீரர் அல்ஜாரி ஜோசப்பை வெளியேற்றியதன் மூலம் தனது 150ஆவது டெஸ்ட் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இதன்மூலம் 4,000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்களை விரைவாகப் பெற்ற இரண்டாவது ஆல் ரவுண்டர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். வெறும் 64 ஆட்டங்களில் பென் ஸ்டோக்ஸ் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 63 டெஸ்ட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியதே தற்போது வரை உலக சாதனையாக இருந்து வருகிறது. தற்போது 64 போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்தது மூலம் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.