Skip to main content

இந்தியாவிற்கு ஆறாவது பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

bajrang punia

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதலில் மீராபாய் சானுவும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான குத்துச்சண்டையில் லோவ்லினாவும், பேட்மிண்டனில் சிந்துவும் வெண்கலப் புத்தகத்தை வென்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் வெண்கலத்தை வென்றுள்ளது.

 

இந்தநிலையில் இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான 65 கிலோ மல்யுத்த போட்டியில், இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பேகோவும் மோதினர். இதில் பஜ்ரங் புனியா 8-0 என தவுலத் நியாஸ்பேகோவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

 

இது டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியா வென்றுள்ள ஆறாவது பதக்கமாகும். இதுவரை இந்த ஒலிம்பிக்சில் இந்தியா இரண்டு வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கலங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பிரியங்கா காந்தியுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Wrestlers meet Priyanka Gandhi!

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று முன்தினம் (20.12.2023) தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது சாக்‌ஷி மாலிக், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணாக நான் இங்கு வந்துள்ளேன்” எனத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் எம்பி தீபேந்தர் எஸ் ஹூடா கூறுகையில், “பிரியங்கா காந்தி மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டது நமது பெண் மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மல்யுத்த வீரர்களுக்கு இறுதி வரை ஆதரவாக இருக்கும்” எனத் தெரிவித்தார். 

Next Story

பிரிஜ் பூஷண் விவகாரம்; அதிர்ச்சி முடிவை அறிவித்த பஜ்ரங் புனியா

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Brij Bhushan Affair; Bajrang Punia announced the shock result

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று முன்தினம் (20.12.2023) தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.