இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு வருட தடை முடிந்து இருவரும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா அணியில் அவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் ஸ்மித்துக்கு கேப்டன் பதவி வழக்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதை சமூகவலைதளங்களில் காண முடிகிறது. இம்முறை ஸ்மித்துக்கு பதிலாக ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 வீரர்கள் கொண்ட ஆஸி. அணி:
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன்.