Published on 27/11/2020 | Edited on 27/11/2020

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 375 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
சிட்னியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 114, ஸ்மித் 105, வார்னர் 69, மேக்ஸ்வெல் 45 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 3, பும்ரா, சைனி, சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.