அரியலூர் மாவட்டம் தத்தனூர் தனியார் கல்லூரியில் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 690 பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில் கடலூர் மாவட்டம் சி.அரசூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அரியலூர் எஸ்பி சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு எழுதி முடித்தவுடன் ரகுபதியை பிடித்து விசாரித்ததில்.
கன்னியாகுமரி மாவட்டம் அரக்கன்கோட்டை விலை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் சகோதரர் தேவபிரகாசிற்காக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ரகுபதி மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் தேவபிரகாஷ் ஆகியோரை கைது செய்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தில்லு முல்லுகள் நடப்பதை தடுக்க போலீஸ் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த போலீஸ் துறையில் நடந்த காவலர் எழுத்து தேர்விலேயே ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இந்த ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் வெற்றி அடைவதற்கு ரகுபதிக்கு .1 லட்சத்து 50 ஆயிரம் பேரம் பேசி பணம் கைமாறியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.