Published on 11/01/2019 | Edited on 11/01/2019

இங்கிலாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். 31 வயதான ஆண்டி முர்ரே 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டமும், ஒரு முறை உலக சாம்பியன் பட்டமும் பெற்றவர். மேலும் 2012, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த 20 மாதங்களாக இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதனை பற்றி அவர் கூறுகையில், ' இன்னும் ஆறு மாதங்கள் கழித்தே எனது ஓய்வை அறிவிப்பதாக இருந்தேன், ஆனால் எனது உடல்நிலை மோசமடைந்து வருவதால் தற்பொழுதே ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்' என கண்ணீருடன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். ஆண்டி முர்ரே சமூக சேவைக்கான பிரிட்டன் அரசின் உயரிய விருதான ஓ.பி.இ விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.