Published on 21/06/2018 | Edited on 21/06/2018
இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
சர்வதேச ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், உலகளவில் 12ஆவது அணியாக தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. அந்த அணி தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய அணியுடன் விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியில், 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், வருங்கால போட்டிகளுக்காக ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில், ஆப்கானிஸ்தான் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட் போட்டி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், ஆப்கானிஸ்தான் அணி உலக சாம்பியனான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் வரும் 2020ஆம் ஆண்டு மோதவுள்ளது. அதையடுத்து, நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் அந்த அணி களமிறங்கவுள்ளது. அந்த தொடர் 2020-2021 காலகட்டத்தில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.