இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கபுகேதரா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.