Skip to main content

குழந்தைகளைப் பத்திரப்படுத்த வேண்டிய நேரமிது!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

பெரியவர்களை விட அதிகமாகப் பாதிக்கக் கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகள் இருப்பதால்  நாம்  அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பல குடும்பங்களிலும் சமூகங்களிலும் சொத்துகளாகவே குழந்தைகள் பார்க்கப் படுகின்றனர்.இன்று பெரியவர்களாக இல்லாமல் இருக்கலாம்.வருங்கால சமுதாயத்தை நிர்மாணிக்கும் சக்திகள் அவர்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். மனம், புத்தி, தனிக் கருத்துகள் தனக்கு தேவையானதை தானே தீர்மானிக்கும் சுய அறிவு உள்ளவர்களாக நாம் அவர்களை தயார் செய்ய வேண்டும். குழந்தைகளை வழி நடத்துவது மட்டுமே நமது வேலை.அவர்களின் வாழ்க்கை குறித்து அனைத்து முடிவுகள் அவர்களே  எடுப்பது போன்ற தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும்.
 

d



குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை பொருளாதாரத்தில் நம்மை சார்ந்தே உள்ளார்கள் என்ற தாழ்வு மனப் பான்மையை மறந்தும் கூட நாம் அவர்களுக்கு ஊட்டி விடக் கூடாது. வீட்டுச் செலவு பட்ஜெட்டை அவர்களுடன் கலந்துதான் முடிவெடுக்க வேண்டும். குழந்தைகள் மற்ற சில சமூக விரோதிகளால் தவறாகப் பயன் படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற விசயத்தில் தனி எச்சரிக்கை  வேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும் 40000 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். 11000 குழந்தைகள் மீட்க முடிவதில்லை என்ற கசப்பான உண்மை சுடுகிறது. மாறிவரும் கலாச்சாரம், வளரும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற அம்சங்கள் குழந்தைகளைப் பெரும் அளவில் பாதிக்கும் என்பதைப் பெற்றோர்கள் நாம் முதலில் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து சொல்லிக்கொடுக்க வேண்டியது தற்கால தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.