கடந்த சில மாதங்களாக சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வந்தது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றது. இந்நிலையில் செய்தித்தாள் மூலம் கரோனா பரவுமா என்பதற்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பல்வேறு தட்ப வெப்ப நிலையில் எடுத்துவரும் எந்த பொருட்களில் இருந்தும் கரோனா பரவ சாத்தியம் குறைவு என்றாலும், செய்தித்தாள் வாசிக்கும் முன்பும், வாசித்த பின்பும் கைகளை சுத்தம் செய்வது மிக அவசியம் என்று தெரிவித்துள்ளது.