Skip to main content

மிக்ஸி இருக்கா... 20 நிமிடத்தில் பருப்பு உருண்டை குழம்பு தயார்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

பணம், புகழ், சொத்து சுகம் உள்ளிட்ட அனைத்தும் மனிதர்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இயல்பாக வரும். இது சுப்பன், குப்பன் முதல் அம்பானி, அதானி வரை அனைவருக்கும் பொருந்தும். அந்த வகையில் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நல்ல சமையலை சாப்பிடும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கும் போது 'போதும்' என்ற வார்த்தையை நம்மால் இயல்பாகவே கேட்க முடியும். இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது, இரவு கூட நான் சாப்பிடுவேனா? என்று தெரியாது என்று ஒருவரை சொல்லக் வைக்ககூடிய தன்னை நல்ல சமையலுக்கு உண்டு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் படம் போல அனைவருக்கும் எப்போதுமே பிடித்த 'பருப்பு உருண்டை' குழம்பு செய்யும் முறையினை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

துவரம்பருப்பு - 100 கிராம்

கடலைப்பருப்பு - 300 கிராம்
 
பாசிப்பருப்பு - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

சின்ன வெங்காயம்  - 200 கிராம்

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம்

இஞ்சி - ஒரு துண்டு

தேங்காய் துருவல் - 100 கிராம்

மல்லித் தழை - தேவையான அளவு

கறிவேப்பில - சிறிதளவு

எலுமிச்சம்பழச் சாறு -  2 ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி, பருப்புகளை ஒன்றார கழுவி நன்றாக ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்க் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

ஆவியில் வெந்த அந்த உருண்டைகளை குழம்பில் போட்டு சிறிது நேரத்திற்குள் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்துவிட வேண்டும். அதிக சூடு இருந்தால் பருப்பு உருண்டை கரைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதனை காரச் சட்னியுடன் சேர்ந்து சாப்பிட்டால் நாக்கில் எச்சில் ஊறும் என்றால் அதில் ஆச்சரியம் இல்லை.  மேல உள்ள அளவிற்கு பொருட்களை எடுத்துக்கொண்டால் 3 அல்லது 4 பேருக்கு அந்த குழம்பு போதுமானதாக இருக்கும்.