உடலில் ஏற்படும் அதீத உடல் சூட்டை குறைப்பதற்கு இளநீர் மிக முக்கிய பானமாக இருக்கிறது. ஒரு கப் இளநீரில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றது. குறிப்பாக 600 கிராம் பொட்டாசியம், 250 கிராம் சோடியம், 60 கிராம் மக்னீசியம், 58 கிராம் கால்சியம், 48 கிராம் பாஸ்பரஸ் முதலிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம். அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு இளநீர் அருமருந்தாக இருக்கின்றது. இளநீரில் உள்ள அதன் சதை பகுதி உடலின் வறட்சி தன்மையை போக்கும் ஆற்றல் உடையது. வயிற்றுப்புண், வாய் புண் ஆகிவற்றை நீக்கம் ஆற்றல் இளநீருக்கு அதிகம் இருக்கின்றது.

சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும் இளநீர் உதவுகின்றது. அம்மை நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இளநீர் அருந்திருனால் நோயின் தாக்கம் வெகு சீக்கிரமாக குறையும். இதில் உள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுக்கும் வல்லமை உடையது. இரத்த சோகை மற்றும் ரத்த கொதிப்பை முறைப்படும் ஆற்றல் இளநீருக்கு உண்டு. குழந்தைகள் தொடர்ந்து இளநீரை அருந்தி வந்தால் அவர்களின் எலும்புகள் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையில்லாத கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இளநீருக்கு அதிகம் இருக்கின்றது.