Skip to main content

சிறுநீர் கசிவிற்கு இதுதான் காரணமா? - விளக்குகிறார் டாக்டர் சரவணன்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Is this the cause of urine leakage? - explains Dr. Saravanan

 

சிறுநீர் கசிவு பிரச்சனை குறித்து டாக்டர் சரவணன் விரிவாக விளக்குகிறார்.

 

சிறுநீர் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு நிறைய நீர் அருந்த வேண்டும். உப்பு சேர்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத மருந்துகளை சாப்பிடக்கூடாது. மருத்துவர்களை அணுகாமல் நாமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பாட்டி வைத்தியங்களை அதிகம் செய்யக்கூடாது. 

 

சிறுநீர் கசிவு என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஒன்று. ஆண்களுக்கு அவசரமாக சிறுநீர் வரும்போது, அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கசிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு இந்தக் காரணங்களினாலும் இருமல், தும்மல் போன்ற நேரங்களிலும் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. சிலருக்கு தங்களை அறியாமலேயே சிறுநீர் கசிவு தொடர்ந்து ஏற்படும். பெரும்பாலும் இவற்றை மருந்து மாத்திரைகளின் மூலமே குணப்படுத்தலாம். 

 

நீர்ப்பையின் கொள்ளளவு குறையும்போது இந்தப் பிரச்சனை ஏற்படும். அதன் அளவை அதிகப்படுத்தும்போது பிரச்சனை தீர்ந்துவிடும். அறுவை சிகிச்சை காரணமாகவோ, கர்ப்பப்பைவாய் புற்றுநோய் காரணமாகவோ, நீர்ப்பையில் இருக்கும் புற்றுநோய் காரணமாகவோ இந்தப் பிரச்சனை ஏற்படலாம். அறுவை சிகிச்சை மூலமாக இதை குணப்படுத்த முடியும்.