Skip to main content

இன்றைய ராசிபலன் - 10.05.2018

Published on 10/05/2018 | Edited on 10/05/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

 

10-05-2018, சித்திரை 27, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 11.28 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 12.11 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பகல் 12.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.
 

meshamமேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சாதகப் பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

 

 

reshabamரிஷபம்

இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.
 

3மிதுனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
 

kadagamகடகம்

இன்று எதிர்பாராத பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
 

5சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
 

kannirasiகன்னி

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவார்கள். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டார நட்பால் அனுகூலம் உண்டாகும்.
 

thulamதுலாம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.
 

viruchagamவிருச்சிகம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகலாம். குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

danushதனுசு

இன்று உங்கள் உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

magaramமகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் உள்ள மந்த நிலை விலகும்.
 

kumbamகும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
 

meenamமீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

சார்ந்த செய்திகள்