மேஷம்
இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
கடகம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.
கன்னி
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 1.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 1.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
தனுசு
இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
கும்பம்
இன்று பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
மீனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.