கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி, நாள்தோறும் சுவாமி வீதி உலா உள்ளிட நிகழ்ச்சிக்கள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு முத்துமாரி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தேரில் ஏற்றப்பட்டது. அதன்பின் மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் உடன் கூடியிருந்த பக்தர்கள், தேர் வடத்தை பிடித்து இழுத்தனர்.
முத்துமாரியம்மன் பங்குனி மாத தேரோட்ட நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டனர். பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக குழந்தையுடன் தேரை வடம் பிடித்தும் இழுத்தனர். பங்குனி மாத முத்துமாரியம்மன் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு ஆங்காங்கே நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.