Published on 03/10/2018 | Edited on 03/10/2018

பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்குவது, ஸ்மார்ட் வகுப்புகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் கூறியது,
ஒவ்வொரு மாணவருக்கும் தலா நான்கு செட் சீருடை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒன்றாம் வகுப்பு 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பச்சை நிற சீருடையும், 6முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடையும் வழங்கப்படும். புதிய சீருடைகள் அடுத்த கல்வியாண்டு முதல் வழங்கப்படும். முதல்கட்டமாக 5 ஸ்மார்ட் வகுப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.