Skip to main content

கிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

Again, we have decided to make a strong protest against the kiran pedi-namashivayam annonce

 

காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து புதுச்சேரியில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் புதுச்சேரியிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.  முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அக்கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,  விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், “ மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ள கிரண்பேடியை கண்டித்து, தொடர்ச்சியாக 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியும், ஆளும் அரசு முன்வைத்த கோரிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

 

அதையடுத்து கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முழுவதும் கிராமங்கள் தோறும் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். மேலும் “ அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்.  அது சந்தர்ப்பவாத கூட்டணி” என்றும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்