20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இரவு வேலைகளில் சரியாக உறங்காததால், வேலை செய்யும் அலுவலகத்தில் சரியாக வேலை செய்ய முடிவதில்லை என்று ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களை தூங்குவதற்கு என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து அதிர்ச்சியளித்துள்ளது.
கிரேசி இண்டர்நேஷனல் என்ற ஜப்பான் நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்களின் இரவில் ஆறு மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். அதை கணக்கிட பிரத்யேகமாக செயலியையும் பதிவிறக்கம் செய்தள்ளது. இதை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளி வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.
சரியான புள்ளிகளை பெறுபவர்களுக்கு நிறுவனத்திலுள்ள உணவகத்தில் ஆண்டுக்கு ரூ 42 ஆயிரம் வரையிலும் உணவு உட்கொள்ளலாம் அல்லது பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தினர், சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி ஆண்கள், பெண்கள் என 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் 92 சதவீதம் பேர் இரவு சரியாக தூங்குவதில்லை. அதிகமானோர் செல்போனில் மூழ்கி தூக்கத்தை இழப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தயாரிப்புகள் பாதிக்கப்படுவதால், இத்திட்டத்தை செயல்படுத்தி தூங்க வைக்க முற்படுகிறோம் என்று கூறுகின்றனர்.