Skip to main content

பிப்ரவரி 20-ல் வெளியாகிறது சியோமி எம்.ஐ.9... அதனுடன் இன்னும் இரண்டு ஃபோன்களும் வெளியாகிறது...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

mm

 

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஃ    போனான எம்.ஐ.9 இந்த மாதம் 20-ம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஃபோனின் சிறப்பம்சங்கள் குறித்து எந்தத் தகவலும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், இந்த ஃபோனின் சிறப்பம்சங்கள் குறித்து சில தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஃபோன் 6ஜி.பி. ரேம், 128ஜி.பி இண்டெர்நல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜி.பி. ரேம், 256ஜி.பி இண்டெர்நல் ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு ரகங்களில் வெளியாகுமென தெரிகிறது. இந்த ஃபோனின் கேம்ராவை பொறுத்தவரையில் பின்புறத்தில் 48 எம்.பி மற்றும் 12 எம்.பி என இரட்டைக் கேம்ராக்களுடன் வெளியாகுமெனவும், செல்ஃபி கேம்ரா 24 எம்.பியில் வரலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளது. 

 

குறிப்பாக சியோமி 9 வெளியாவதற்கு முன்பாக சில மாதங்களாகவே இந்த ஃபோன் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறதென வதந்திகளை சிலர் பரப்பி வந்தனர். ஆனால் தற்போது அந்நிறுவனம் வதந்திகள் பரவிய தேதியான பிப்ரவரி 20 அன்றே வெளியிடுகிறது. ஆனால் அன்றைய தேதி சீனாவில் மட்டுமே சியோமி 9 ரக ஃபோன் வெளியாகிறது. மேலும் உலகம் முழுக்க பிப்ரவரி 24-ம்  தேதி வெளியாகிறதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

samsung
samsung-10 

 

பிப்ரவரி 20-ம் தேதி சியோமி 9 ரகம் மட்டுமின்றி சாம்ஸங் நிறுவனத்தின் எஸ்10 ஸீரிஸ் ஃபோனும் வெளியாகிறது. 

 

nokia
nokia-9 pureview

 

சியோமி 9 ரக ஃபோன் உலக அளவில் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளது. அன்றைய தினம்தான் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர் வீவ் ஃபோனும் வெளியாகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்