Skip to main content

தளர்த்தப்பட்ட விதிகள்; மூன்றாவது முறையாக அதிபராக தேர்வான ஷி ஜின்பிங்! 

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

Xi Jinping has been elected as the President of China for the third term.

 

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் தேர்வாகியுள்ளார். 

 

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார். சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜின்பிங் பெறுகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இந்தப் பதவியில் இரண்டு முறைதான் இருக்க முடியும். ஆனால், அந்த விதியை திருத்தி, தளர்வு ஏற்படுத்தப்பட்டு ஷி ஜின்பிங் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்