உலகம் முழுவதும் நிலவி வரும் போர்சூழல் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 7 கோடி பேர் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.
இதுகுறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள குறிப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அளவை விட இரு மடங்கு மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக மக்கள் வெளியேறிய நாடுகளில் சிரியா முதலிடம் வகிக்கிறது.
சிரியாவிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 60 லட்சம். இதனைத் தொடர்ந்து வெனிசுலாவில் இருந்து 40 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். மேலும் யுனிசெப் அமைப்பின் தகவல் படி கடந்த ஆண்டு உகாண்டா நாட்டில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட 2800 குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தொலைக்கப்பட்டு பிரிந்துள்ளனர்.
மேலும் மொத்தமாக இடம்பெயர்ந்தவர்களில் பாதி பேர் குழந்தைகள், அதுவும் அவர்கள் பெரும்பாலானோர் குடும்பங்களை பிரிந்து தனியாக தவிக்கும் சூழலில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.