உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.39 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.91 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 82.67 லட்சமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 72,018 பேருக்குக் கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 36,93,655 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 7.52 லட்சம் பேர், ஸ்பெயினில் 3.05 லட்சம் பேர், பெருவில் 3.41 லட்சம் பேர், சிலியில் 3.23 லட்சம் பேர், பிரிட்டனில் 2.92 லட்சம் பேர், ஈரானில் 2.67 லட்சம் பேர், மெக்ஸிகோ 3.17 லட்சம் பேர், தென் ஆப்பிரிக்காவில் 3.24 லட்சம் பேர், சீனாவில் 83,612 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளில் 43,829 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 20,14,738 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,299 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76,822 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 940 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,41,095 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 11,937, பெருவில் 12,615, தென் ஆப்பிரிக்காவில் 4,669, ஸ்பெயினில் 28,416, பிரிட்டனில் 45,119, சிலியில் 7,290, ஸ்பெயினில் 28,396, மெக்ஸிகோவில் 36,906, ஈரானில் 13,608, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.