பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் குடித்துவிட்டு வீசியெறியப்படும் கண்ணாடி பாட்டில்களில் அழகான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். மக்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கிய கூல்டிரிங்ஸ் பாட்டில்களை குடித்துவிட்டு குப்பைத்தொட்டில்களில் போட்டு விடுவது வாடிக்கையான ஒரு நிகழ்வு. அது மட்கவும் செய்யாது, பூமிக்கு பாரமாக இருக்கும். இந்நிலையில், பிரேசில் நாட்டில், சா பாலோ மாகாணத்தைச் சேர்ந்த இவான் மார்டின்என்ற பெண், தனது இருப்பிடத்தைச் சுற்றி கண்ணாடி பாட்டில்கள் இருப்பதைப் பார்த்துள்ளார். அவற்றைச் சேகரித்து, சிமெண்டு பூச்சுடன் அவற்றைக் கொண்டு வீடுகட்டியுள்ளார்.
இந்த வீடு 3 மீட்டர் உயரமும் , 9 மீட்டர் அகலமும்,8 மீட்டர் நீளம் கொண்டுள்ளது. இதில் படுக்கையறை, சமையலறை கழிவறைகள் உள்ளன. இதுகுறித்து மார்டின் கூறியதாவது, " மிகக் குறைந்த செலவில் 6 ஆயிரம் மாட்டில்களைக் கொண்டு இந்த வீட்டைக் கட்டியுள்ளேன். பாட்டில்களால் வீடுகட்டியதால் சுற்றுப்புறச் சூழல் தடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.