Skip to main content

இன்றைய கூகுள் டூடுளின் அர்த்தம் தெரியமா...?

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

 

gg

 

ஒலிம்பிக்ஸ் போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ், இன்று அர்ஜன்டினாவில் துவங்கவுள்ளது. 2010 முதல் யூத் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றுவருகிறது. இது குளிர்கால யூத் ஒலிம்பிக்ஸ் மற்றும் கோடைக்கால யூத் ஒலிம்பிக்ஸ் என இரு பிரிவுகளாக நடைபெற்றுவருகிறது. இதில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொள்கின்றனர். 2010-ல் தொடங்கிய யூத் ஒலிம்பிக்ஸ் கோடைகால தொடர் முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெற்றது. அடுத்தது 2014-ல் சீனாவில் நடைபெற்றது. இந்த இரண்டு கோடைகால யூத் ஒலிம்பிக்ஸிலும் சீனாதான் முதல் இடம் பிடித்தது. அதற்கடுத்தது குளிர்கால யூத் ஒலிம்பிக்ஸ் 2012-ல் ஆஸ்திரியாவிலும் 2016-ல் நார்வே நாட்டிலும் நடைபெற்றது. இதில் 2012-ல் ஜெர்மனியும் 2016-ல் அமெரிக்காவும் வெற்றிபெற்றது. இதில் இறுதியாக 2014-ல் நடந்த கோடைகால யூத் ஒலிம்பிக்ஸில் மொத்தம் 87 நாடுகள் பங்குபெற்றன அதில் இந்தியா 64-ஆம் இடத்தை பிடித்தது. மூன்றாவது முறையாக நடைபெறும் கோடைகால யூத் ஒலிம்பிக்ஸ் 2018-ல் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன. இதில் தென்கிழக்கு ஐரோப்பாவின் கொசோவோ எனும் நாடும் சவுத் சூடானும் முதல் முறையாக பங்குபெறுகின்றன மேலும் 47 விளையாட்டு வீரர்களுடன் 13 விளையாட்டு பிரிவுகளில் இந்தியா களமிறங்குகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்