Skip to main content

'ஆப்கானிஸ்தானுக்கு சென்ற காரியம் முடிந்துவிட்டது' - ஜோ பைடன் பேச்சு!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

joe biden

 

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் தொடர்ந்து வெளியேறிவருகின்றன. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. தலிபான்களுக்குப் பயந்து இராணுவ வீரர்கள் அண்டை நாட்டில் தஞ்சம் புகுவதும் நடைபெறுகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு முடிவுக்குவரும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "ஆப்கானிஸ்தானில் எங்கள் இராணுவ பணி ஆகஸ்ட் 31 அன்று நிறைவடையும். ஏப்ரல் மாதத்தில் நான் கூறியது போல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எதைச் செய்ய சென்றதோ அதைச் செய்தது. 9/11 அன்று எங்களைத் தாக்கிய பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்கும், ஒசாமா பின்லேடனுக்கு நீதி வழங்குவதற்கும், அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானைப் பயங்கரவாத தளமாக மாற்றும் தீவிரவாத அச்சுறுத்தலைக் குன்றச் செய்வதற்கும் ஆப்கானிஸ்தான் சென்றோம். அந்த நோக்கங்களை நாங்கள் அடைந்துவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர், "தேசத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு செல்லவில்லை. தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, தங்கள் நாட்டை எவ்வாறு வழிநடத்துவது என்பது ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமை மற்றும் பொறுப்புமாகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதி கானி மற்றும் தலைவர் அப்துல்லாவை நான் சந்தித்தபோது, ஆப்கான் தலைவர்கள் ஒன்றுகூடி ஆப்கானிஸ்தான் மக்கள் விரும்புகின்ற, அவர்களுக்குத் தகுதியான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டேன். எங்கள் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்றும் கானிக்கு உறுதியளித்தேன்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஜோ பைடன், "பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காகப் குரல்கொடுப்பது உட்பட பொதுமக்கள் தொடர்பான உதவிகளையும் மற்றும் மனிதாபிமான உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். ஆப்கானிஸ்தானில் எங்கள் இராஜதந்திர இருப்பைப் பராமரிக்க நான் விரும்புகிறேன். சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்ந்து பாதுகாக்க சர்வதேச நண்பர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளோம். அமைதியை நிலைநாட்ட உறுதியான ராஜதந்திரத்தில் நாங்கள் ஈடுபடுவோம். உணர்வற்ற வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்திலும் நாங்கள் ஈடுபடுவோம்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்