Skip to main content

இந்தியரின் உதட்டை கடித்து துப்பிய பெண்...

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
thailand

 

இந்தியாவைச் சேர்ந்த சாஷாங் அகர்வால் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இவர் மதுபாண கடையில், நன்கு குடித்துவிட்டு இவர் தங்கியிருந்த அறைக்கு திரும்பியுள்ளா. சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பாலியல் தொழில் செய்யும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுகன்யா பேபி என்னும் பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும்போது. அகர்வால், சுகன்யாவிடம்  பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் ஒன்றாக நடந்துகொண்டிருக்கும் போது அகர்வால், சுகன்யாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
 

கடுப்பான சுகன்யா, அகர்வாலின் கீழ் உதட்டை பிடித்து கடித்து துப்பியுள்ளார். வலியால் கதறிய அகர்வால் பின் போலிஸாரை அழைக்க, போலிஸார் அகர்வாலுக்கு முதல் உதவி செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரப்பரபாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

“தாய்லாந்தில் சிக்கியிருக்கும் மற்ற தமிழர்களையும் மீட்கும் பொறுப்பை அரசு  ஏற்கும்” - அமைச்சர் மஸ்தான் 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"Government will accept the responsibility of rescuing other Tamils ​​trapped in Thailand" - Minister Mastan

 

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்து நாட்டில் பணி செய்ய சென்றனர். அங்கிருந்து அவர்கள் முறைகேடாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், பணி செய்ய மறுத்தால் அந்த கடத்தல் கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த விவகாரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து சென்ற 300 நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 13 பேர் இருந்தனர். 

 

தமிழர்கள் மியான்மரில் சிக்கி தவிக்கும் விவகாரத்தை அறிந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தகவல் தெரிவித்தது. 

 

இந்நிலையில் மியான்மரில் சிக்கி தவித்திருந்த 13 தமிழர்கள்,  நேற்று தாயகம் திரும்புகின்றனர். 13 தமிழர்களும் ஹாங்காங்-லிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர்.  அவர்களை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தாய்லாந்து நாட்டில் வேலை என கூறி பல்வேறு ஏஜண்ட்கள் மூலம் அங்கு சென்ற தமிழர்கள் பலர் தாய்லாந்தின் பக்கத்து நாடான மியான்மரில், சொன்ன வேலையை தவிர்த்து வேறு வேலைகள் வழங்கியுள்ளனர். அதனை இவர்கள் செய்ய மறுத்தபோது பல்வேறு இன்னல்களை சந்தித்து, அங்கு சிக்கி தவித்துள்ளனர். 

 

இந்தத் தகவலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் தகவலை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்மூலம், இந்த 13 நபர்களும் தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தாய்லாந்திலிருந்து தமிழ்நாடு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுகொண்டது. இன்னும் பல பேர் அங்கு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர்களையும் அழைத்து வரும் பொறுப்பை அரசு ஏற்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.