Published on 01/01/2021 | Edited on 01/01/2021

2021 புத்தாண்டு பிறந்தது - அமெரிக்காவில் மக்கள் கோலாகலமாகப் புதிய ஆண்டை வரவேற்றனர்.
அமெரிக்காவில் உள்ள வர்த்தக தலைநகரமான நியூயார்க் நகரில் உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டைக் கொண்டாடினர். மேலும் ஆடல், பாடல் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
கடும் குளிரில் 'மாஸ்க்' அணிந்தபடி வாண வேடிக்கைகளுடன் அமெரிக்க மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கலந்துகொண்டார்.