கேரளாவில் பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளவிற்கு சுற்றலா செல்லவேண்டாம் என அமெரிக்க அரசு தனது நாட்டு மக்களுக்கு அறிவுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த புதன்கிழமை முதல் பெய்துவரும் கன மழையினால் கேரளாவில் வயநாடு, கண்ணூர், ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வெள்ளநீர் வெளியே செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தன்னூரில் மழை வெள்ளத்தால் வீட்டுக்கள் அடித்து செல்லப்பட்டன.
கொச்சி விமானநிலையத்தில் விமான ஓடுபாதையில் நீர் புகுந்ததால் மோட்டார் பம்ப் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்புக்குழுவினர் படகுமூலம் மீட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடுக்கி அணை 26ஆண்டுகளுக்கு பிறகு திறப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலமாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 பேர் உயிரிலிந்துள்ளனர். இந்நிலையில் கேரளா ஒரு உலகப்பிரபலமான இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத்தளம் ஆனால் தற்போது வெள்ள அபாயம் நிலவுவதால் தன்நாட்டு சுற்றுலா பயணிகள் கேரளாவிற்கு சுற்றுலா செல்லவேண்டாம் என அமெரிக்க அரசு தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.