உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தீவிரத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபையின் அவசரக் கூட்டம் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவையும், அது கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதில், 14 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து ஐ.நா. பொதுச் சபையின் செயலாளர் அந்தோணியா குட்டரெஸ் அதிர்ச்சி தெரிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா விவகாரம் தொடர்பாக, ஐ.நா. பொதுச் சபையின் அவசரக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய நான்கு பகுதிகளை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.