Published on 23/12/2018 | Edited on 23/12/2018

இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த பேரிடரில் உயிரிழப்பு எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.
கிரகடோவா எரிமலை வெடிப்பை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் முதல்கட்டமாக 43 பேர் பலியானதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்தோனேசிய பேரிடர் முகமை தகவல் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது 168 பேர் சுனாமி பேரிடரில் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.