Skip to main content

சுனாமி பீதியால் மட்டக்களப்பு மக்கள் அச்சம்!

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
சுனாமி பீதியால் மட்டக்களப்பு மக்கள் அச்சம்!

இலங்கையின் மட்டக்களப்பு நாவலடியில் டிச.2ம் தேதி காலை, மீன்பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களின் வலையிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004 சுனாமி பேரலையின் பொழுது, பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 கடலில் இருந்துகரை ஒதுங்கிய பாம்புகள் அனைத்தும் இறந்துவிட்டன. பெரும்பாலானவை இறந்த நிலையிலேயே கரை ஒதுங்கின. 

முதிர்ந்த மீனவர்கள் கூறுகையில், "இது ஒரு வகை மண் உழுவி எனப்படும் பாம்பு இனம். இந்த பாம்பினத்தை சிலர் ஆரல் மீன் எனுவும் அழைக்கின்றனர்.  ஆனால், ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வகை பாம்பினமனது சூனாமிக்கு முன்பும், மழை அதிகரிக்கும் பொழுதும், ஆற்றில் இருந்து கடலில் செல்வது வழக்கமான ஒன்று.

கிழக்கில் ஒரு தடவை இந்த பாம்பினத்தை கல்லடி பாலத்தில் மக்கள் பார்த்துள்ளனர். அதன் பின் சூனாமி வந்ததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வகை பாம்புகள் உப்பு நீரில் அதிக காலம் வாழ முடியாது. அதனால் தான் செத்துவிடுகின்றன. செத்து மிதக்கும் பொழுது மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன!" என்றனர்.

அதிகளவிலான பாம்புகள் முதல்முறையாக மீனவர்களின் வலைகளில் பிடிபட்டிருப்பது மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்