Skip to main content

11 நிமிடங்களுக்கு ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது ஏன்? - முடக்கியவர் விளக்கம்

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
11 நிமிடங்களுக்கு ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது ஏன்? - முடக்கியவர் விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் பக்கத்தை 11 நிமிடம் முடக்கியவர், தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.



அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். சில தினங்களுக்கு முன்னர் அவரது ட்விட்டர் பக்கம் 11 நிமிடங்களுக்கு மட்டும் தற்காலிகமாக முடங்கியது. தற்போது, அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய ஜெர்மனியைச் சேர்ந்த பகிதியார் துய்ஷக் என்வர், நான் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று கொண்டே சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். பிறரின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் பதிவுகளை நீக்குவதுதான் எனது பணி. எனது பணி நிறைவடையும் கடைசி நாள் அதேபோல், பதிவுகளை நீக்கிக் கொண்டிருந்தேன். அதிபர் ட்ரம்ப் பதிவுகள் குறித்து ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிவிட்டேன்.

ஆனால், பலரிடம் இருந்து புகார்கள் குவிந்ததை அடுத்து 11 நிமிடங்களில் மீண்டும் அவரது கணக்கை செயல்பட வைத்தேன். எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே, தற்போது விளக்கமளிக்கிறேன் என காணொளியில் தோன்றி பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்