அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய ஆசை ஒன்றை இணையவாசியம் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் திட்டம் டிரம்ப்பிடம் இருப்பதாகவும், அதற்கான ரகசிய ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் அரசின் மானியத்துடன் இயங்கிவரும் கிரீன்லாந்து சுமார் 21.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மிகப்பெரிய தீவு ஆகும். வெறும் 56,000 பேர் மட்டுமே வசிக்கும் இந்த தீவு பல்வேறு சிறப்புகளை பெற்றது.
கனடாவின் வடகிழக்கில் அமைந்துள்ள உலகின் மிக அழகான இடங்களை கொண்ட இந்த தீவில் தான் உலகின் மொத்த நன்னீரில் 10 சதவீதம் உள்ளது. இப்படி பல சிறப்புகளை கொண்ட கிரீன்லாந்து தீவினை அமெரிக்க அரசு விலைக்கு வாங்குவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 1945ம் ஆண்டில் அமெரிக்காவின் 33வது அதிபரான ஹாரி எஸ் ட்ருமென், கிரீன்லாந்த் தீவை விலைக்கு வாங்க முயற்சித்து, அதற்காக 100 மில்லியன் டாலர்கள் விலையும் பேசினார். ஆனால் அப்போதைய ஒருசில அரசியல் சூழல்களால் அந்த முயற்சி வெற்றி பெறாமல் போனது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் இந்த முடிவு அமெரிக்கா அரரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டையுமே சம அளவில் பெற்று வருகிறது. அதேவேளையில் டென்மார்க் அரசியல்வாதிகள் சிலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் ட்ரம்ப் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்தார். அமெரிக்க அதிபர் ஆனதற்கு பின்னரும் அவர் தனது முந்தைய வேலையைதான் செய்து வருகிறார் எனவும் சமூல வலைத்தளங்களில் அவரை கலாய்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.