Skip to main content

சிறிய குப்பைகளை அகற்ற காகங்களுக்கு பயிற்சி...சுகாதாரம் பற்றி மனிதர்களுக்கு உணர்த்த பூங்கா நிர்வாகம் செய்த முயற்சி...

Published on 12/08/2018 | Edited on 12/08/2018

 

​​crows

 

 

 

பிரான்சில் உள்ள பூங்காவில், பூங்காவிற்கு வருகை புரிவோர் இடும் சிறிய குப்பைகள் மற்றும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 

பிரான்சில் மேற்கு பகுதியில் உள்ள ''புய் டு பவ்'' என்ற பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் மக்கள் சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களின் குப்பைகள், சிகரெட் துண்டுகளை சரியாக அப்புறப்படுத்தாமல் குப்பை தொட்டியில் போடாமல் சென்று வருகின்றனர். இதனால் பூங்கா சுகாதாரம் பாதிக்கப்படுகிறது எண்ணிய பூங்கா நிர்வாகத்தினர் காக்கைகளுக்கு பயிற்சி அளித்து சிறிய சிறிய குப்பைகளை எடுத்து குப்பை தொட்டிகளில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதன் தொடக்கமாக முதலில் 6 காக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் சில காக்கைகள் தங்களது பணியை தொடங்கிவிட்டன. இதுபற்றி அந்த பூங்காவின் தலைவர் நிகோலஸ் டி வில்லியர்ஸ் கூறுகையில், இங்கு வருவோர் எல்லோரும் குப்பைகளை அகற்றாமல் செல்பவர்கள் அல்ல ஆனால் சிலர் சிறிய குப்பைகளை கூட குப்பை தொட்டியில் சேர்க்காமல் போய்விடுகின்றனர். இப்படி காக்கைகள் குப்பைகளை அப்புறப்படுத்துவதை பார்க்கும் அவர்களுக்கு இயற்கையே சுற்றுச்சூழல்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை விரும்பும்போது நாம் ஏன் அலட்சியமா இருக்கிறோம் என்ற எண்ணத்தை அவர்கள் மனத்தில் உருவாக்கவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.

சார்ந்த செய்திகள்