வியட்நாமில் டோக்சுரி புயல் தாக்கியதால் டைபூன் நகரமே நிலைக்குலைந்து
வியட்நாம் நாட்டை தாக்கிய டோக்சுரி புயல் காரணமாக நகரமே நிலைக்குலைந்து. வியட்நாம் நாட்டை நேற்று பலத்த காற்றுடன் கடந்தது. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு வீடுகளின் கூறைகள் அடித்து செல்லப்பட்டது. காற்றின் வேகம் வாகனங்களை புரட்டி போட்டது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீர் தேங்கியது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்.