Published on 06/03/2022 | Edited on 07/03/2022
ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வரும் மரியுபோல் நகரில் ஐந்தாவது நாளாக மக்கள் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ரஷ்யா அறிவித்த தற்காலிக போர் நிறுத்தம் முழுமையாக அமலாகாததால், சுமார் இரண்டு லட்சம் மக்கள் மரியுபோல் நகரில் சிக்கியுள்ளனர். இங்கு சண்டைத் தீவிரமடைந்திருப்பதால், மக்கள் குடிநீர், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் ஐந்தாவது நாளாக தவித்து வருகின்றனர்.
போர் நிறுத்த அறிவிப்பையடுத்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேறி, நகரின் மையத்திற்கு வந்த மக்கள் மீண்டும் குடியிருப்புகளுக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். சாலைகள் எங்கும் மனித உடல்கள் காணப்படுவதாகவும், எங்கு செல்வது, என்ன செய்வது என்று அறியாமல் திகைப்பதாகவும் மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.