Skip to main content

தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி

Published on 24/09/2017 | Edited on 24/09/2017

தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 
4 பேர் பலி

தாய்லாந்தில் உள்ள பட்டானி மாகாண நேற்று அதிகாலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்