பெருவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் இடையே மோதல்
பெருவில் ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படவில்லை என்பது கல்வியாளர்களின் புகாராகும். எனவே தங்களுக்கு போதுமான ஊதியம் வழங்க கோரி அந்நாட்டின் தலைநகர் லிமாவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் பேரணியாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.