Published on 09/10/2023 | Edited on 09/10/2023

இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிற்கு வழங்கிவருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் சுவிஸ் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், சுவிஸ் வங்கியில் இருக்கும், தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான பொருளாதார கணக்குகள் அடங்கிய தகவல் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் பரிமாற்றத்தில் இரகசியத்தன்மை காரணமாக மொத்த பணத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.