Published on 24/04/2019 | Edited on 24/04/2019
இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் இதுவரை 390 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் நேற்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான 'அமாக்' நிறுவனம் வாயிலாக அறிவித்தது. இந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும் கூறினார். இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் சிறிசேனா தெரிவித்தார்.